க.அ. மதியழகன்
கி.பி. 1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் நாள் திரு.அருணாச்சலம் பிள்ளை, ஆவுடையம்மாள் என்கிற இலட்சுமியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகக் கணியூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம் என்பதாகும். தமிழ் மேல்கொண்ட மையலில் தனது இயற்பெயரை மாற்றி மதியழகன் என்று வைத்துக்கொண்டார்.
1931-லிருந்து 1938-வரை கணியூரில் துவக்கக்கல்வியும், நடுநிலைக் கல்வியும் கற்றார்.
1939 முதல் 1942 வரை உயர்நிலைக்கல்வி உடுமலையில் கற்றார்.
1939 தந்தை பெரியாருடன் அறிமுகமானார்.
1938 ல் இந்தி எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சிகளில் ஈர்க்கப்பட்டார்.
1943 முதல் 1947 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாற்றிய மாநாட்டில் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.
1944 இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.
1944 குடந்தையில் திராவிட மாணவர் மாநாட்டில் பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
1944 திருவாரூரில் கலைஞர் கருணாநிதியின் அழைப்பின் பேரில் மாணவர் மன்ற விழாவில் பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
1944 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார்.
1945 அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
1947 ல் கொடிப்போராட்டத்தால் வழக்குகள் மற்றும் தேர்வு எழுதத் தடைகளைச் சந்தித்தார்.
1947-ல் திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி உறுப்பினராகப் பெரியாரால் நியமிக்கப்பட்டார்.
1948 கவர்னர் ஜெனரல் இராஜாஜி கருப்புக் கொடி போராட்டத்திற்கான கூட்டத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவுடன் கைதானார்.
1947ல் B.A. பட்டம் பெற்றார்.
1948 ல் ஈரோட்டில் நடந்த திராவிடர் கழகச் சிறப்பு மாநாட்டில் பேச்சாளராகப் பங்கேற்றார்.
1948 ல் சென்னை சட்டக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.
1949 ல் உடுமலைப் பேட்டையில் 144 தடை உத்தரவு மீறலுக்காக தந்தை பெரியாருடன் கைதானார்.
1949 ல் செப்டம்பர் 17 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரானார்.
1950 ல் கடலூரில் இந்தி அழிப்புப் போராட்டத்திற்காகச் சிறை சென்றார்.
1950 முதல் 1955 வரை திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
1951 ல் தி.மு.க. வின் சட்டதிட்டங்களை உருவாக்கினார்.
1951 முதல் 1956 வரை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்.
1953 ல் மும்முனைப் போராட்டத்தில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக அறிஞர் அண்ணாவுடன் கைதானார்.
1954 தேவிகுளம் பீர்மேடு போராட்டம் கடற்கரை மதியழகன் தீர்மானம்.
1958 ல் பிரதமர் நேருவிற்குக் கறுப்புக் கொடி போராட்டத்தில் கைதானார்.
1956 முதல் 1960 வரை தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
1957 ல் உடுமலை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார்.
1959 ல் ராஜசுந்தரியுடன் திருமணம் புரிந்தார்.
1960 முதல் தலைமை கழகச் செயலாளரானார்.
1960 தி.மு.க. செயற்குழு உறுப்பினர் மற்றும் தலைமை நிலையச் செயலாளரானார்.
1960 ல் கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மாநாட்டு செயலாளராக இருந்தார்.
1961 ல் மதுரை பொது மாநாட்டைத் திறந்து வைத்தார்.
1962 சட்டமன்ற தி.மு.க. கட்சியின் செயலாளரானார்.
1962 விலைவாசிப் போராட்டம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக மறியலில் கைது.
1963 ல் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார்.
1964 சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி சிறை சென்றார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1967 ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டாம் முறையாக சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1967 ல் தலைமை செயற்குழு, ஆட்சி மன்றக்குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
1967 ல் அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் உணவு வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார்.
1967 ல் ரோம் நகரத்தில் அகில உலக உணவு மாநாட்டில் இந்தியக் குழுவின் தலைவராகக் கலந்து கொண்டார்.
1969 ல் தி.மு.க. தலைமைச் செயற்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரானார்.
1969 ல் கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் நிதித்துறை, வருவாய்த் துறை மற்றும் திட்டம் அகதிகள் மறுவாழ்வு அமைச்சரானார்.
1969 ல் தர்மபுரியில் மதியழகன் தலைமையில் தந்தை பெரியார் முன்னிலையில் கலைஞர் கருணாநிதி அவர்களால் பெரியார் சிலை திறப்பு விழா.
1970 ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
1970 பாரிஸ் நகரத்தில் மூன்றாவது உலக தமிழ் மாநாடு இந்தியக் குழு தலைவராகக் கலந்து கொண்டார்.
1971 ல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றியடைந்தார்.
1971 ல் சட்டப் பேரவைத் தலைவரானார்.
1973 ல் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவரானார்.
1976 ல் கோவை மாவட்ட சிறப்பு தி.மு.க. மாநாட்டில் உடல் நலம் குன்றியபோதும் ஆவேச உரையாற்றினார்.
1983 ல் சுயமரியாதைச் சுடர் கே.ஏ.மதியழகன் மறைந்தார்.

கொடைகள் சில,
1967-ல் வைரவன் செட்டியார் என்பவருக்கு கணியூரில் 200 ஏக்கர் சொந்தமாக இருந்தது. அவர் மதியழகன் மேல் கொண்ட அன்பினால் 5 ஏக்கர் பூமியை அரிஜன மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கி மதியழகன் நகர் என்று பெயரும் சூட்டினார். அதுமட்டுமில்லாமல், வைரவன் செட்டியார் தனக்கு அன்பளிப்பாக வழங்கிய 5 ஏக்கர் பூமியை மருத்துவ மனை கட்டுவதற்காக அரசுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த மருத்துவமனை தான் கணியூரைச் சுற்றிலுள்ள சுமார் 20 கிராம மக்களுக்கு இன்று வரை இலவச மருத்துவ சேவை புரிந்து வருகிறது.
புத்தகங்கள் சில,
1953 – சீனத்துசேதி
1954 – பூபதிகளின்கோட்டம்
1955 – வெந்தணல்
1956 – மணிமகுடம்ஓர்ஆராய்ச்சி
1958 – மாணிக்கத்தொட்டில்
1959 – லெனினைப்பற்றி
கலில் கிப்ரான் என்ற அரேபியக் கவிஞரின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
சரிதம் பாடம் காவிரி – கவிஞர் கண்ணதாசன் கவிதைகளைத் திறனாய்வு செய்தார்.
மேலும், கர்நாடகத்தின் நாடோடிப் பாடல்கள், கொங்கு நாட்டுத் தீரன், எதையும் தாங்கும் இதயம், எங்கிருந்தோ வந்தான், பிள்ளைக் கனியமுது, பருவ மழை மற்றும் சம்பங்கி சருகு( சிறுகதைகளின் தொகுப்பு நூல்).
இவை மட்டுமின்றி, தென்னகம் என்ற வாரப் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார்.

க.அ.கிருஷ்ணசுவாமி
கி.பி. 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் நாள் திரு.அருணாச்சலம் பிள்ளை, ஆவுடையம்மாள் என்கிற இலட்சுமியம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் கணியூரில் பிறந்தார். இவர் கணியூர் குடும்பத்திலிருந்து வந்த மூன்றாவது தலைவர். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். 1972 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.இராமச்சந்திரனுடன் இரண்டாவது உறுப்பினராக இணைந்தார். AIADMK வின் முதல் அமைப்புச் செயலாளரானார். தென்னகம் தினசரி பத்திரிக்கையின் உரிமையாளர் மற்றும் ஆசிரியராக இருந்தார். புரட்சித் தலைவர் என்ற பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியவர். 1980 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவர் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் சிறிது காலம் உறுப்பினராக இருந்தார். 1984 மற்றும் 1991 தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978–87 காலகட்டத்தில், ராமச்சந்திரனின் அமைச்சரவையில் கூட்டுறவு, சிறு தொழில்கள், பால்வள மேம்பாடு மற்றும் உள்ளூர் நிர்வாகம் போன்ற துறைகளை அவர் வகித்தார்.1991–96 காலகட்டத்தில் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தார். 1996 இல் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கிருஷ்ணசாமி மே 18, 2010 அன்று இறந்தார்.